Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகம் செலவிடக் கூடாது: ரகுராம் ராஜன்

அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகம் செலவிடக் கூடாது: ரகுராம் ராஜன்

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால், இந்தியாவின் இறக்குமதிச் செலவு அதிகரித்து, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மேலும் உயரக்கூடும்.

பகிரவும் WhatsApp Facebook

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதைத் தடுக்க, அந்நியச் செலாவணி கையிருப்பை அளவுக்கு அதிகமாகச் செலவிடக் கூடாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

நிகழாண்டில் இதுவரை ரூபாயின் மதிப்பு சுமார் 6 சதவீதம் சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க அரசு பத்திரங்களின் வருவாய் அதிகரிப்பு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து முதலீடுகளைத் திரும்பப் பெறுவது ஆகியவை ரூபாயின் மதிப்புச் சரிவுக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.

இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு ரகுராம் ராஜன் அளித்த பேட்டி:

ரூபாயின் மதிப்பு குறைவதைக் கண்டு பதற்றமடையத் தேவையில்லை. ரூபாயின் மதிப்பு குறைவதால் இந்தியப் பொருட்கள் வெளிநாட்டுச் சந்தைகளில் விலை குறைவாகக் கிடைக்க வாய்ப்புள்ளது. இது ஏற்றுமதியை அதிகரிக்க உதவும்.

அதேநேரத்தில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால், இந்தியாவின் இறக்குமதிச் செலவு அதிகரித்து, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மேலும் உயரக்கூடும். ரூபாயின் மதிப்பை ஆதரிப்பதற்காகவும், வங்கித் துறையில் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கைகள் மூலம் திரட்டப்பட்ட 140 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையில் சுமார் பாதி பயன்படுத்தப்பட்டுள்ளது. ரூபாயின் குறிப்பிட்ட மதிப்பைப் பாதுகாப்பதற்காக மீதமுள்ள நிதியையும் விரைவாகச் செலவிடுவது சரியான அணுகுமுறையல்ல.

மேலும், மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து, வளைகுடா நாடுகளின் எரிசக்திக் கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்துள்ள இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
Hybrid working could unlock billions in productivity gains: Report
அடுத்த செய்தி
Mr Robot renting out tech tools to target banking customers

தொடர்புடைய செய்திகள்